search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுந்தர் பிச்சை"

    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். #Google



    தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருக்கும் அறிக்கையில், பயனர் விவரம் மற்றும் தனியுரிமை விவகாரத்தில் கூகுள் நிறுவனத்தின் நிலைப்பாடு பற்றி விளக்கமளித்து இருக்கிறார். 

    "தனியுரிமை உலகவாசிகள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக கிடைக்க வேண்டும். கூகுளின் நிலைப்பாடு தனியுரிமையை அனைவருக்கும் சமமானதாக மாற்றுவது தான். மக்கள் தங்களது தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, அவை எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். உலகம் முழுக்க நான் சந்திப்பவர்கள் இதுபற்றி என்னிடம் கேட்கின்றனர்.



    "தனியுரிமை தனித்துவமானது. இதனால் நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தனிப்பட்ட விருப்பங்களை வழங்க வேண்டும். கூகுள் நிறுவனத்தை பொருத்தவரை அனைவருக்குமான சேவைகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

    இதன் காரணமாகவே கூகுள் பதில்கள் உலகம் முழுக்க சமமாக ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. கூகுள் தேடல்களில் அனைவரும் சமமாக பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது." இவ்வாறு சுந்தர் தெரிவித்திருக்கிறார்.

    முன்னதாக கூகுள் நிறுவனம் தனது IO2019 டெவலப்பர்கள் நிகழ்வில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சேவைகள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்தார். #SundarPichai



    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து பேசியதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    இச்சந்திப்பின் போது கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது பற்றியும், அரசியல் சார்பு மற்றும் சீன வியாபாரம் பற்றி இருவரும் பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். 

    "தான் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக," சுந்தர் பிச்சை தெரிவித்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும் கூகுள் நிறுவனம் நம் நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். சந்திப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது!," என டிரம்ப் தெரிவித்தார். 



    "நாங்கள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைச்சகத்துடன் சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வருகிறோம்," என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

    கூகுள் நிறுவனம் சீனாவில் மேற்கொள்ளும் பணிகளால் சீன ராணுவம் ஆதாயமடைந்து வருவதாக அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த ராணுவ அதிகாரி ஜோசப் டன்ஃபோர்டு குற்றஞ்சாட்டியிருந்தார். கூகுள் கோரிக்கையை ஏற்று டன்ஃபோர்டு சுந்தர் பிச்சையை சந்தித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் மேற்கொள்ளும் வியாபாரத்தால், அதிகளவிலான மிகமுக்கிய விவரங்கள் மறைமுகமாக சீன ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுவது அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமையலாம் என்று ஜெனரல் டன்ஃபோர்டு வருத்தம் தெரிவித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் பட்ரிக் ரைடர் தெரிவித்தார். 

    சீனாவில் பல ஆண்டுகளாக கூகுள் முதலீடு செய்து வருகிறது. மேலும் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சந்தர் பிச்சை தெரிவித்தார். 
    கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேரை கூகுள் பணிநீக்கம் செய்திருக்கிறது. #Google



    கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சில ஆண் ஊழியர்களை கூகுள் நிறுவனம் காப்பாற்றியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
     
    இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்களுக்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அனுப்பிய மின்னஞ்சலில் இடம்பெற்று இருந்தது. 

    இது 2014ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு மென்பொருள் அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு நேரடி பதிலாக அமைந்தது.

    சுந்தர் பிச்சை எழுதியிருக்கும் மின்னஞ்சலில், 2015ம் ஆண்டு கூகுள் பல்வேறு கடின முடிவுகளை எடுத்தது. இவற்றில் கூகுள் துணை தலைவர்கள், மூத்த துணை தலைவர்கள் கூகுள் நிறுவனத்தில் ஒரே துறை அல்லது மற்ற துறைகளில் பணியாற்றுவோருடன் உறவு பாராட்டும் பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. என குறிப்பிட்டிருக்கிறார்.

    இத்துடன் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 48 ஊழியர்களில் 13 பேர் மூத்த மேளாலர்கள் அல்லது அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர் என சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். இந்த 13 பேருக்கும் கூகுள் சார்பில் பணிவிடுப்பு மற்றும் நிலுவைத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    "கூகுளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்," என்றும் சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார். 
    கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார். #RaviShankarPrasad #Google



    கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்தித்து பேசினார்.

    இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்று பல்வேறு இதர திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும், என சுந்தர் பிச்சையிடம் தெரிவித்ததாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். 

    "கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் கூகுள் நிறுவன குழுவினருடன் சிறப்பான சந்திப்பு. இந்தியாவில் டிஜிட்டல் வில்லேஜ் போன்ற பல்வேறு திட்டங்களில் கூகுளின் பங்களிப்பு இருக்க வேண்டும் என சுந்தர் பிச்சையிடம் கேட்டுக் கொண்டேன்," என ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நவீன விவசாய முறை மற்றும் வானிலை குறித்த விவரங்களை இந்திய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூகுளிடம் கேட்டுக் கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு மூன்று நாட்கள் அலுவல் ரீதியிலான சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரவி சங்கர் பிரசாத், தொழில்நுட்பத் துறையின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் டிஜிட்டல் பரிணாமத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
    கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியனின் அபராத நடவடிக்கைக்கு கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதில் அளித்திருக்கிறார். #Google



    உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமாக கூகுள் இருக்கிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள், ஆன்ட்ராய்டு உற்பத்தியாளர்களிடம் தனது செயலிகளை வலுக்கட்டாயமாக புகுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஐரோப்பிய யூனியனில் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. 

    விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு 500 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.



    இத்துடன் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கூறியது.

    ஐரோப்பிய யூனியனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளதாவது:-

    ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கை இலவச-ஆன்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனர்கள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே இன்ஸ்டால் செய்கின்றனர். மேலும், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.



    மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்கள் எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆன்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும். இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தவில்லை.

    இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    கூகுள் தனது செயலிகளை சாதனங்களில் வழங்குவதை எவ்வாறு முறைப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஒருவேளை, மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தாங்களாகவே பிரவுசரை வழங்கும் வாய்ப்பு கிடைத்தால், கூகுளின் மொபைல் விளம்பர வருவாயினை அதிகம் பாதிக்கும். கூகுளின் டிஜிட்டல் வருவாயில் விளம்பரங்களில் இருந்து மட்டும் 50% அதிகம் ஆகும்.

    ஆன்ட்ராய்டு வியாபார யுக்தி மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூகுள் எச்சரித்துள்ளது. இதன் மூலம் மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை உரிமம் அடிப்படையில் வழங்க துவங்கும். கூகுள் க்ரோம் பிரவுசர் மொபைல் போன்களின் டீஃபால்ட் பிரவுசர் பகுதியில் இருந்து நீக்கப்பட்டாலும், பயனர்கள் இதனை அவர்களாகவே பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்வர் என்றே கூறலாம்.
    ×